/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மாரத்தான் 465 பேர் உற்சாக பங்கேற்பு
/
புதுச்சேரியில் மாரத்தான் 465 பேர் உற்சாக பங்கேற்பு
புதுச்சேரியில் மாரத்தான் 465 பேர் உற்சாக பங்கேற்பு
புதுச்சேரியில் மாரத்தான் 465 பேர் உற்சாக பங்கேற்பு
ADDED : ஏப் 08, 2024 05:28 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், 100 சதவீத ஓட்டுப்பதிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பை வலியுறுத்தி நடந்த மாரத்தான் போட்டியில், 465 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையின் இயந்திர மின்னணுவியல் துறை, 'டெட்ரான் எக்ஸ் 2 கே 24' எனும் தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு, வரும், 15 மற்றும் 16ம் தேதிகளில், நடத்த உள்ளது.
இதை முன்னிட்டு, இயந்திர மின்னணுவியல் துறையானது, லாப் - ஓ - கிராம் அறக்கட்டளை, தொழில்நுட்ப பல்கலையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்புடன் இணைந்து, 5 கி.மீ., துாரத்திற்கான மாரத்தான் போட்டியை, நேற்று காலை 6:00 மணிக்கு, நடத்தியது.
இந்த போட்டி,100 சதவீத ஓட்டுப் பதிவை உறுதி செய்தல் மற்றும் போதைப்பொருள் உபயோகத்தை தவிர்த்தல் ஆகிய, கருப்பொருளை முன்னிறுத்தி நடந்தது.
இந்த மாரத்தான், புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் துவங்கி, அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம் வழியே சென்று மீண்டும் கடற்கரை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது.
புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, பள்ளி மாணவர்கள் - 125; கல்லுாரி மாணவர்கள் - 250; பல்வேறு பிரிவுகள் - 90, எனமொத்தம் 465 பேர்பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்குமொத்தம், ரூ.24 ஆயிரம், ரொக்க பரிசாக வழங்கப்பட்டது.

