/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம்
/
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம்
ADDED : ஜூலை 15, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரியும், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடந்தது. அண்ணா சிலை அருகே நடந்த ஊர்வலத்திற்கு மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்கள் பொழிலன், மங்கையர்செல்வன், வீரமணி, புதியராஜா, பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.