தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காப்பு கலை பயிற்சி முகாம்

தற்காப்பு கலை பயிற்சி முகாம்

தற்காப்பு கலை பயிற்சி முகாம்


ADDED : செப் 05, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பனித்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவங்கியது.

புதுச்சேரி கல்வி துறை மூலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை (கராத்தே ) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது.

தலைமை ஆசிரியர் அமர்தேவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கராத்தே சங்க பொதுச் செயலாளர் வளவன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சங்க இணை செயலாளர் பாலச்சந்தர் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தனர்.

பட்டதாரி ஆசிரியர் கவிதா, உடற்கல்வி ஆசிரியர் சவுந்தரராஜன் நோக்கவுரையாற்றினர். பயிற்சியாளர்கள் ரஞ்சித், ராஜலட்சுமி, தமிழரசி ஆகியோர் தற்காப்பு கலையின் சிறப்புகள் குறித்து விளக்கி, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் கராத்தே பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us