/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி விழா
/
காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி விழா
ADDED : மார் 05, 2025 04:32 AM

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு எல்லை சங்கராபரணி நதிக்கரை வடபுறத்தில அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக பிரம்மோற்ச விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் கலசாபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றி, தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை நடைபெறும் விழாவில் இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வரும் 6ம் தேதி முத்துப்பல்லக்கு உற்சவமும், 10ம் தேதி இரவு 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. முக்கிய விழாவாக 12ம் தேதி மாசி மக தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.