UPDATED : மே 01, 2026 11:04 PM
ADDED : மே 01, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், மே தின விழா, ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டேண்டில் கொண்டாடப்பட்டது.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். அதே போல், புதிய பஸ் ஸ்டேண்ட், உப்பளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, வாணரப்பேட்டை, அம்பேத்கர் சாலை ஆட்டோ ஸ்டேண்ட் உட்பட பல்வேறு இடங்களில் மே தின விழா கொண்டாடப்பட்து.
சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அன்பானந்தம், ரயில் நிலைய அண்ணா தொழிற் சங்கப் பேரவை ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
