
திருக்கனுார் : புதுச்சேரி மாநில ராஜபுத்திர குல மரபினர், புதுச்சேரி மாநில மத்திய சலவைத் தொழிலாளர்கள் சமூக நலமுன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்றுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காட்டேரிக்குப்பம் சலவை தொழிலாளர் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகன் வரவேற்றார். மாநில செயலாளர் முத்தா பலராமன் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அனைத்து சலவை துறைகளிலும் தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தி, துணி பாதுகாப்பு அறைகள், மதில் சுவர் அமைத்துதர வேண்டும்.
சலவை துறைகளின் வாடகை, மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து இலவசமாக வழங்க வேண்டும்.
சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள சலவைத் துறைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

