ADDED : ஜூலை 26, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார், சுல்தான்பேட், வளர்பிறை நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான், 55; ஆட்டு இறைச்சி வியாபாரி.
இவர் நேற்று முன்தினம் கடைக்கு ஆடு வாங்குவதற்கு தனது ஸ்கூட்டரில் (பி.ஓய் 01 பி.ஏ. 7321) மயிலம் பகுதிக்கு சென்று, ஆடுகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
காட்டேரிக்குப்பம் – கூனிமுடக்கு சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள தனியார் கம்பெனி அருகேயுள்ள சாலை வளைவில் திரும்பிய போது, திடீரென ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. தலையில் படுகாயமடைந்த முஜிபுர் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
