ADDED : ஜூலை 26, 2026 07:41 PM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முத்துவின் அகவை 80 அமுத மலர் வெளியீடு விழா நடந்தது.
சங்கச் செயலர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். பொருளாளர் அருள் செல்வம், துணை தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று அமுதவிழா மலரினை வெளியிட, திருவாரூர் சண்முகவடிவேல் பெற்றுக் கொண்டார்.
இதில், அமைச்சர் சிவக்கொழுந்து பங்கேற்று முத்து கிருட்டிணவேணி இணையருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கோவிந்தராசு, பாலசுப்ரமணியன், உமா அமலோற்பவமேரி, மாலிறையன், குழந்தைவேலனார், வேல்முருகன், தமிழ்மணி, சீனு வேணுகோபால் வாழ்த்தி பேசினர்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, ஆனந்த வடிவேலு, தமிழமல்லன், தலையாரி, பாரதி, விஜயராணி, இளமதி ஜானகிராமன், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சிவேந்திரன், ஆனந்தராசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 80 நபர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அகநயா பவுண்டேஷன் நிறுவனர் ரம்யா சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
