
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஆர்ய வைசிய சமாஜம் சார்பில் இ.சி.ஆர். சாலையில் உள்ள வெஸ்ட் மெட் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவமனை நிர்வாகி டாக்டர் அருள்மணி தலைமையிலான மருத்துவ குழுவினரால், ஆர்ய வைசிய சமூக மக்களுக்கு ஹீமோளோபின், சர்க்கரை அளவு, சீறுநீர் சோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கிரீனிங், எலும்பு அடர்த்தி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ஆர்ய வைசிய சமூக மக்களின் தலைவர் வேணுகோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், டாக்டர் அருள்மணிக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை ஆரிய வைசிய குழுக்களான பூமா வைசியா, யுவஜன சேவா சங்கம் மற்றும் மகிளா சங்கம் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.