/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
/
லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
ADDED : பிப் 25, 2025 05:00 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி நடந்தது. மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மரக்கன்றுகளை நட்டனர்.
பெஞ்சல் புயலின்போது லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் மீண்டும் பசுமையை ஏற்படுத்த தினமலர் நாளிதழ் முயற்சி எடுத்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் கைகோர்த்து சமூக பொறுப்புணர்வுடன் ஹெலிபேடு மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு வருகின்றன. அந்த வரிசையில் வனத்துறை, லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
பல்வேறு பிரிவுகளாக பிரிந்த வனத் துறை ஊழியர்கள், லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சொர்க்கம், நாவல், மஞ்சள் கொன்றை, பூவரசன் உள்பட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு, சுற்றி வேலி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீஜெயக்குமார், தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் ஜவகர், வனக்காப்பாளர் அருள்ராஜ், துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி, துணை இயக்குநர் ராஜ்குமார், வேளாண் அதிகாரி கலைசெல்வன் வழிகாட்டுதலின்படி, செயலாக்க உதவியாளர் வேல்முருகன் தலைமையில் வனத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
லட்சுமிநாராயணா மருத்துவ கல்லூரி நிறுவனர் ஜெகத்ரட்சகன், தலைவர் சந்திப் ஆனந்த், வழிகாட்டுதலின்படி, தலைமை நிர்வாக அதிகாரி அன்பு, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, லட்சுமிநாராயணா அலைடு ஹெல்த் சயின்ஸ் முதல்வர் சோமசுந்தரம் மற்றும் செவிலியர் கல்லுாரி முதல்வர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

