நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் மழை பொழிய வேண்டி மனவளக்கலை சார்பில் தியானம் செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயபுரீஸ்வரர் தேவஸ்தான திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மனவளக்கலை சார்பில் கடுமையான வெப்பத்திலிருந்து பொதுமக்கம் மற்றும் கால்நடைகளை காக்கவும், மழை வேண்டி அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்து கொடுத்த தியானத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் அனைத்து மனவளக்கலை மன்றத்தினரும் தங்கள் பகுதியில் உள்ள மனவளக்கலை மையங்களில் மழை வேண்டி மழை தியானம் மேற்கொண்டனர் . அதைப்போல திருப்பட்டினம் பகுதி மனவளக்கலை மன்றத்தினர் பங்கேற்று மழை வேண்டி தியானம் நடத்தினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.