/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது
/
காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது
காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது
காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது
ADDED : ஜூலை 22, 2024 01:44 AM

புதுச்சேரி : காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் மாணவர்களுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை துவங்கியது.
கருவடிக்குப்பம் இ.சி.ஆரில் 39 கோடி ரூபாய் செலவில் காமராஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மாணவர்களுக்கு நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அன்மையில் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். நுாலகத்தில் தற்போது 50 ஆயிரம் நுால்கள் உள்ளன. விரைவில் 2 லட்சம் நுால்கள் இடம் பெற உள்ளன.
காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் மாணவர்களுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் விண்ணப்ப படிவத்தினை வழங்கி துவக்கி வைத்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இயக்கத்தின் சார்பில், மாணவர்கள், சேர்க்கை படிவம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்தனர். நிகழ்ச்சியில் அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி, அனைத்து கூட்டமைப்பின் தலைவர் இளங்கோவன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இயக்க தலைவர் சசிகுமார், ஆலோசகர் அருள், சத்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் மணிமண்டப நுாலகத்தில் நாவல்கள் மட்டுமின்றி, பருவ இதழ்கள், மாத இதழ்கள், போட்டி தேர்வு நுால்களும் உள்ளன. உறுப்பினர் சேர்க்கை கட்டணமாக சிறுவர்களுக்கு 15 ரூபாய், பெரியவர்களுக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.