/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் தொழில்முறை தரத்தினை மேம்படுத்த காரைக்கால் என்.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
போலீஸ் தொழில்முறை தரத்தினை மேம்படுத்த காரைக்கால் என்.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
போலீஸ் தொழில்முறை தரத்தினை மேம்படுத்த காரைக்கால் என்.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
போலீஸ் தொழில்முறை தரத்தினை மேம்படுத்த காரைக்கால் என்.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 17, 2024 06:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் தொழில்முறை தரத்தினை மேம்படுத்த காரைக்கால் என்.ஐ.டி., உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
புதுச்சேரி போலீசாரின் தொழில்முறை தரம் மற்றும் திறனை மேம்படுத்தும் முயற்சியாக, போலீஸ் துறை, காரைக்கால் என்.ஐ.டி.,யுடன் நேற்று ஒபந்தம் ஏற்பட்டது.
சன்வே ஓட்டலில் நேற்று நடந்தது நிகழ்ச்சியில் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், காரைக்கால் என்.ஐ.டி., இயக்குநர் காங்ரேகர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் என்.ஐ.டி., இயக்குநர் காங்ரேகர் பேசுகையில்; புதுச்சேரி போலீஸ் முயற்சி பாராட்டுக்கு உரியது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திறம்பட செயல்படுத்தப் படும்.
ஒப்பந்தம் மூலம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என பல்வேறு வழிகளில் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு காவல்துறைக்கு பயன்படும் என கூறினார்.
டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் பேசுகையில்; பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போலீஸ் துறையின் கல்விசார் ஒத்துழைப்பு, கல்வி நிறுவனங்களுக்கும், போலீசுக்கும் பயன் அளிக்கும். இந்நிறுவனங்களின் கூட்டு முயற்சி சமூகத்தின் பொது நலனுக்கு பயனுள்ளதாக அமையும்.
பல்வேறு திறன் மேம்பாடு திட்டங்களை தவிர அனைத்து போலீசாருக்கும், போலீஸ் துறை அறிவியலில் டிப்ளமோ வழங்குவதிற்காக ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் இந்தாண்டு துவக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என கூறினார்.
நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் யாதவ், என்.ஐ.டி., டீன் மகாபத்ரா, காரைக்கால் சீனியர் எஸ்.பி., மணீஷ், தலைமையக சீனியர் எஸ்.பி., அனிதாராய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.