ADDED : ஆக 02, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: மதகடிப்பட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் 3வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் 108 பால்குட அபி ேஷகம் நடந்தது.
இதனையொட்டி, அங்காளம்மன் கோவிலில் இருந்து மேல தாளங்கள் முழங்க துவங்கிய பக்தர்களின் பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியே சென்றது. பின், ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து கோவிலில் சுவாமிகளுக்கு 108 பால்குட அபி ேஷக செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
