/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாகமுத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்
/
நாகமுத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்
ADDED : ஏப் 25, 2024 03:37 AM

புதுச்சேரி: சாரம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நடந்த பால் குட ஊர்வலத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் உள்ள கோவில்களில், சித்ரா பவுர்ணமியையொட்டி பல்வேறு வழிபாடுகள் நடந்தன. குறிப்பாக, அம்மன் கோவில்களில், பால் அபிேஷகம் சிறப்பான முறையில் நடந்தது. இதையொட்டி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில், காலை 9:00 மணிக்கு, 108 பால் குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. மேலும் காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்திருந்தார்.

