/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பால் கறவை இயந்திரம்: அமைச்சர் வழங்கல்
/
பால் கறவை இயந்திரம்: அமைச்சர் வழங்கல்
ADDED : ஜூலை 24, 2024 06:12 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் 21 பேருக்கு, பால் கறவை இயந்திரத்தை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில் கால்நடை வளர்ப்போர்க்கான பால் கறவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூனிச்சம்பட்டு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பால் கறவை இயந்திரத்தை 21 பயனாளிகளுக்கு வழங்கினார்.
டாக்டர் கதிரேசன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், நிர்வாகிகள் தமிழ்மணி, வீரராகவன், செல்வகுமார், கலியபெருமாள், டாக்டர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த 33 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.