விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ஆனந்த் ஆலோசனை
விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ஆனந்த் ஆலோசனை
ADDED : ஜூலை 07, 2026 06:52 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாவட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூடுதல் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் வரவேற்றார். கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அமுதவல்லி, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., சிவக்குமார், செஞ்சி எம்.எல்.ஏ., கணேஷ்குமார், எஸ்.பி., மதிவாணன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான, ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த் மாவட்டத்தில் அரசு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீரஷத், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஷீலாதேவி சேரன், ஊரக வளரச்சித்துறை செயற்பொறியாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் நன்றி கூறினார்.
