/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மார் 04, 2025 09:49 PM
காரைக்கால் : காரைக்காலில் நலவழித்துறை சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.
காரைக்கால் திருநகர் சமுதாய நலக் கூடத்தில் நடந்த முகாமை, குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார். கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் வரவேற்றார்.
முகாமில் பொது சுகாதாரம், மார்பக, கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை, நீரிழிவு, ரத்த சோகை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் அமைச்சர் திருமுருகன் கண் பரிசோதனை செய்து கொண்டார். முதன்மை திட்ட மருத்துவர் தேனாம்பிகை, திருநகர் மருத்துவ அதிகாரி தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.