/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பகலில் பாதாள சாக்கடை பணி; அமைச்சர் லட்சுமிநாராயணன் 'அட்வைஸ்'
/
பகலில் பாதாள சாக்கடை பணி; அமைச்சர் லட்சுமிநாராயணன் 'அட்வைஸ்'
பகலில் பாதாள சாக்கடை பணி; அமைச்சர் லட்சுமிநாராயணன் 'அட்வைஸ்'
பகலில் பாதாள சாக்கடை பணி; அமைச்சர் லட்சுமிநாராயணன் 'அட்வைஸ்'
ADDED : மார் 09, 2025 03:31 AM
புதுச்சேரி காமராஜர் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. 24 மணி நேரமும் வாகனங்கள் பிசியாக உள்ளது. இந்த பரபரப்பான சாலையில் சாரம் பகுதியில் இப்போது பாதாள சாக்கடை பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது.
பகல் முழுதும் பொக்கலின் கொண்டு ராட்சத குழிகளை தோண்டி பாதாள சாக்கடைகளை அமைத்து வருகின்றனர். இதனால் சாரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் காமராஜர் சாலை வழியாக நேற்று காரில் வந்தார்.
அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து நெரிசலுக்கான காரணத்தை கேட்டறிந்தார். அப்போது பாதாளசாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்த ஒப்பந்ததாரரை அழைத்து டோஸ் விட்டார். இது என்ன அவசர பணியா.. பொதுமக்களை பாதிக்கும் வகையில் இப்படி பாதாள சாக்கடை பணிகளை பகலில் மேற்கொள்ள வேண்டுமா?
இரவு 10 மணிக்கு மேல் பாதாளசாக்கடை பணிகளை துவங்கி விடியற்காலை வரை மேற்கொள்ளலாம். இதனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது.
இனி இதுபோன்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் பாதாளசாக்கடை பணிகளை எங்கும் மேற்கொள்ள கூடாது என, அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.