/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா கும்பலால் தாக்கப்பட்ட காவலர்; மருத்துவ செலவை அரசு ஏற்கும்; சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
கஞ்சா கும்பலால் தாக்கப்பட்ட காவலர்; மருத்துவ செலவை அரசு ஏற்கும்; சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
கஞ்சா கும்பலால் தாக்கப்பட்ட காவலர்; மருத்துவ செலவை அரசு ஏற்கும்; சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
கஞ்சா கும்பலால் தாக்கப்பட்ட காவலர்; மருத்துவ செலவை அரசு ஏற்கும்; சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : ஆக 08, 2024 02:15 AM

புதுச்சேரி : கஞ்சா கும்பலால் தாக்கப் பட்ட காவலரின் மேல் சிகிச்சைக்கானமுழு செலவையும் அரசு ஏற்கும் என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாத்தின்போது அரசு கொறடா ஆறுமுகம் பேசுகையில், வில்லியனுார் பகுதியில் கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற தலைமை காவலர் வசந்த், அங்கிருந்த நபர்களால் குக்கரால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். ரத்த போக்கு நிற்கவில்லை. உடனடியாக உயர் சிகிச்சை கிடைக்க செய்ய வேண்டும்.
நேரு: ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யலாம். போலீசார் செயல்பட விடாமல் கைகள் கட்டப்பட்டுள்ளது. கஞ்சா விற்போரை போலீசார் பிடிக்க விடாமல் அரசியல் தலையீடு உள்ளது.
அமைச்சர் நமச்சிவாயம்: கஞ்சா விற்போர் நிறைய பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா விற்போர் மீது எடுக்கும் நடவடிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் தலையிட மாட்டோம் என, ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும்போலீசார் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.
கல்யாணசுந்தரம்: அதிகாரிகள் துணையுடன் கஞ்சா விற்கப்படுகிறது. கஞ்சாவை பிடிக்க தனியாக இரு குழுக்களை அமைக்க வேண்டும்.
ராமலிங்கம்: காயமடைந்த காவலருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: வில்லியனுார் கோர்க்காடு பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு செல்வதற்குள், அந்த கும்பல் தப்பிவிட கூடாது என்பதற்காக, முன்கூட்டியே தலைமை காவலர் வசந்த் அங்கு சென்றார். அப்போது, அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல் தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காயமடைந்த தலைமை காவலர் வசந்திற்கு உரிய மேல் சிகிச்சை அளிக்கப்படும்.
சபாநாயகர் (ராஜவேலு): விதிமுறைகள் சரியில்லை, வராது என்று எதுவும் கூறாமல் காவலர் வசந்திற்கு ஆகும் அனைத்து செலவையும் அரசு ஏற்க வேண்டும்.
நமச்சிவாயம்: மருத்துவ செலவு முழுதும் அரசே ஏற்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.