/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ.,வில் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
/
பா.ஜ.,வில் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
பா.ஜ.,வில் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
பா.ஜ.,வில் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ADDED : செப் 04, 2024 07:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ.,வில் 2 லட்சம் பேர் புதிதாக உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
பா.ஜ.,வில் தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து, புதுச்சேரி பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்க விழா மரப்பாலம் சுகன்யா கன்வெர்ஷன் சென்டரில் நடந்தது.
கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார்சுரானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக படங்களுடன், அசோக்பாபு எம்.எல்.ஏ., செயல்முறை விளக்கம் அளித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், ஜான்குமார், ரிச்சர்ட், ஓய்வு பெற்ற ஐ.ஜி., சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதிய முறையிலான உறுப்பினர் சேர்க்கையில், தொகுதி, வார்டு வாரியான விபரங்கள் எளிதாக தலைமை தெரிந்து கொள்ள முடியும்.
புதுச்சேரியில் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஒரு தொகுதியில் 6,700 பேர் சேர்க்க வேண்டும். மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள் கூட மக்களுக்கு, கட்சியினருக்கு கூட தெரியவில்லை. மத்திய, மாநில அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி உறுப்பினராக சேர்க்க வேண்டும்' என்றார்.