sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

/

மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


ADDED : ஆக 10, 2024 04:49 AM

Google News

ADDED : ஆக 10, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது; அரியாங்குப்பம் முதல் மரப்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடலுாரில் இருந்து புதுச்சேரி வர முக்கிய சாலை. இதற்கு நிரந்தர தீர்வு உண்டா.

சம்பத் எம்.எல்.ஏ.,; உண்மையான விஷயம். நடவடிக்கை எடுங்கள். கடலுார் சாலையின் இரு பக்கமும் தலா 6 அடி தர வீட்டின் உரிமையாளர்கள் முன் வந்து அதற்கான கடிதம் கொடுத்துள்ளனர். நிதி ஒதுக்கினால் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்து விடலாம்.

அமைச்சர் நமச்சிவாயம்: இதற்காக ரூ. 3.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பத் எம்.எல்.ஏ.; அது இரண்டு பக்கமும் ஏற்கனவே காலியாக உள்ள 2 அடி இடத்தில் சாலை அமைப்பதிற்கு. நான் கூறுவது வாய்க்காலுக்கு பின் பகுதியில் 6 அடி நிலம் தர தயராக உள்ளனர்.

அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரி முழுக்க இப்பிரச்னை உள்ளது. இரண்டு பக்கமும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மாலையில் போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுப்படுவர். 6 அடி விரிவாக்கம் செய்ய நில ஆர்ஜிதம் செய்து விரிவாக்கம் செய்யப்படும்.






      Dinamalar
      Follow us