/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியின் பழனிசாமியாக வேண்டாம்' அமைச்சர் உதயநிதி கிண்டல்
/
'முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியின் பழனிசாமியாக வேண்டாம்' அமைச்சர் உதயநிதி கிண்டல்
'முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியின் பழனிசாமியாக வேண்டாம்' அமைச்சர் உதயநிதி கிண்டல்
'முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியின் பழனிசாமியாக வேண்டாம்' அமைச்சர் உதயநிதி கிண்டல்
ADDED : ஏப் 01, 2024 06:48 AM

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்னொரு பழனிசாமியாக மாறி விட வேண்டாம், என தமிழக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தமிழக அமைச்சர் உதயநிதி, மரப்பாலம் சந்திப்பு மற்றும் அண்ணா சதுக்கத்தில் நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், தவழ்ந்து சென்று, 'பாதம் தாங்கி' பழனிசாமியை போல, முதல்வர் ஆகவில்லை. மோடி அடுத்த, 18 நாட்கள் அவர் தமிழகத்திற்கே குடிபெயர்ந்தாலும், பா.ஜ.,வால், ஒரு தொகுதியில் கூட 'டிபாசிட்' வாங்க முடியாது. அதேநிலையை, புதுச்சேரியிலும், பா.ஜ.,விற்கு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், தணிக்கை குழு வழங்கிய அறிக்கை படி, மத்திய அரசு செலவிட்டுள்ள, 7.5 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு கிடையாது. அது ஊழல் அரசாகவே செயல்பட்டுவருகிறது. கடந்த, 9 ஆண்டுகளில் பிரதமரால் வாழ்ந்த ஒரே நபர், அதானி மட்டும் தான்.
முதல்வர் ரங்கசாமிக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், 'நீங்கள் புதுச்சேரியின் பழனிசாமியாக மாறி விடாதீர்கள்,' என்பது தான். அவரை போல, நீங்கள் பா.ஜ.,விற்கு அடிமையாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால், மக்களால் துாக்கி எறியப்படுவீர்கள்.
இங்கு போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவர் இதுவரை, 5 முறை கட்சி மாறி இருக்கிறார். 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மின்சாரம் தனியார் மயமாவது தடுக்கப்படும். இங்கு ரேஷன் கடைகள் திறக்கப்படும். அதேபோல, புதுச்சேரியின் கடன் படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும்.
மூடப்பட்ட அரசு சார்பு நிறுவனங்களை திறந்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். காரைக்காலில், அதானி கைக்கு சென்றுள்ள துறைமுகம் மீண்டும் மீட்கப்படும்..
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தில், தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், செந்தில்குமார், சம்பத், முன்னாள் அமைச்சர்கள் சிவக்குமார், கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

