/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலதன செலவினம் குறித்து தவறான தகவல்: மாஜி எம்.பி.,
/
மூலதன செலவினம் குறித்து தவறான தகவல்: மாஜி எம்.பி.,
மூலதன செலவினம் குறித்து தவறான தகவல்: மாஜி எம்.பி.,
மூலதன செலவினம் குறித்து தவறான தகவல்: மாஜி எம்.பி.,
ADDED : மார் 15, 2025 06:21 AM
புதுச்சேரி: பட்ஜெட்டில் மூலதன செலவினம் குறித்து தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என, ம.மு.க., தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தவறான புள்ளி விவரம் கொடுத்து அதன் புனித தன்மை குறைத்துவிட்டார். உரையின் 3வது பக்கத்தில், இந்த ஆண்டின் வருவாய் செலவு மற்றும் மூலதன செலவு சதவீதம் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த வரவு செலவு திட்ட மதிப்பீடு ரூ 13,600 கோடியில், ரூ 11,624.72 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும் மற்றும் ரூ. 1975.28 கோடி மூலதன செலவுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, குறிப்பிட்டுள்ளார்.
சதவீத அளவில் வருவாய் செலவு மொத்த செலவில் 85.48 சதவீதம் மூலதன செலவு 14.52 ஆகவும் இருக்கிறது.
ஆனால், மூலதன சதவீதத்தை 4.72 குறைத்து, 9.80 சதவீதம் என குறிப்பிட்டுள்ளார். மூலதன செலவின சதவீதத்தை 9.80 என்று முதல்வர் கூறியிருப்பது தவறு.
ஒரு அரசு சட்டசபையில் சமர்ப்பிக்கும் உரையில் இப்படிப்பட்ட தவறு நிகழக் கூடாது.
முதல்வர் இந்த தவறைத் திருத்தி சட்டசபையில் தெரிவிக்க வேண்டும்.