தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ த.வெ.க., எம்.எல்.ஏ., ராமு மருத்துவமனையில் அனுமதி 

த.வெ.க., எம்.எல்.ஏ., ராமு மருத்துவமனையில் அனுமதி 

த.வெ.க., எம்.எல்.ஏ., ராமு மருத்துவமனையில் அனுமதி 


ADDED : செப் 24, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: த.வெ.க. எம்.எல்.ஏ., ராமுவுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மணவெளி தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., ராமு, பயனாளிகளுக்கு, வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான ஆணை வழங்கிடும் நிகழ்ச்சி, நேற்று காலை அவரது இல்லத்தில் நடந்தது.

ராமு எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கி கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே, அவரது குடும்பத்தினர் மீட்டு, பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கிரிதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us