தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக இந்திய அணி 363 ரன்கள் நிர்ணயம்

ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக இந்திய அணி 363 ரன்கள் நிர்ணயம்

ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக இந்திய அணி 363 ரன்கள் நிர்ணயம்


ADDED : செப் 24, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 363 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயத்துள்ளது.

புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சி.ஏ.பி., சீகெம் மைதானத்தில் இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான 4 நாட்கள் மல்டி டே டெஸ்ட் போட்டி கடந்த 22ம் தேதி துவங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 334 ரன்கள், தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 163 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2வது இன்னிங்சை துவங்கிய  இந்தியா ஏ  அணி 199 ரன்களுக்கு அல்–அவுட் ஆனது. இதில், அதிகபட்சமாக கேப்டன் தேவ்தத் படிக்கல் 59 ரன்கள், முதல் இன்னிங்சில் சதம் அடித்த குமார் குஷாக்ரா 46 ரன்கள் எடுத்தனர். 

இதன் மூலம் 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழந்து 55 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4ம் நாள் (கடைசி நாள்) ஆட்டம் நடக்கிறது. 

ஸ்கோர்: இந்தியா ஏ 334 மற்றும் 57.4 ஓவர்களில் 199 ஆல் அவுட் (சாய் சுதர்சன் 39, தேவ்தத் படிக்கல் 59, குமார் குஷாக்ரா 46 ஆட்டமிழக்காமல், பிரெண்டன் டோகெட் 2/21, டாட் மர்ஃபி 4/48, லியம் ஸ்காட் 2/22) 

ஆஸ்திரேலியா ஏ 171 மற்றும் 23 ஓவர்களில் 55/2.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us