வில்லியனுார் தொகுதியில் குப்பைகளை அகற்ற அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
வில்லியனுார் தொகுதியில் குப்பைகளை அகற்ற அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஜூன் 02, 2026 05:21 PM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடணடியாக அகற்ற கொம்யூன் பஞ்சாயத்தில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
வில்லியனூர் தொகுதியில் நான்கு மாட வீதிகள், சுல்தான்பேட்டை, கொம்பாக்கம், ஒதியம்பட்டு, வி.மணவெளி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாக சரிவர குப்பைகள் அள்ளாமல் தேங்கி உள்ளது. இது குறித்து வந்த புகாரின் பேரில் தொகுதி முழுவதும் தெருக்களை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆணையர் பிரபாகர், உதவி பொறியாளர் சத்தியநாராயணன், குப்பைகள் அள்ளும் தனியார் நிறுவனமான ஹெச்.ஆர். ஸ்கொயர் நிறுவன மேலாளர் உதயசந்திரன் மற்றும் ஏரியா சூப்பர்வைசர்கள் ஆறுமுகம், முரளி, ரவி மற்றும் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வில்லியனூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை எடுத்து, சுத்தமான தெருக்களாக பராமரிக்கும் படி கேட்டுக்கொண்டார். மேலும் குப்பைகள் அள்ளுவதற்கான உபகரணங்கள், ஊழியர்களுக்கு வழங்குமாறும், அந்தந்த பகுதிகளுக்கு தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
