தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளங்கள் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

குளங்கள் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

குளங்கள் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 


ADDED : ஆக 03, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கான பணியாணை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார். 

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வீராம்பட்டினம் துறைமுகம் செல்லும் சாலையில் உள்ள குளம் மற்றும் அரியாங்குப்பம் புதுக்குளம் வளர்ச்சியடைந்த இந்தியா– வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான 125 நாள் உத்தரவாத திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. 

விழாவில், குளங்கள் துார்வாரும் பணியினை அய்யப்பன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் திட்டத்தின் கீழ் தொகுதியை சேர்ந்த 8 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான பணி ஆணை வழங்கினார்.

பின், வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறையின் மூலம் இலவச சீருடை வழங்கினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us