ஆற்று கரையை பலப்படுத்தும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆற்று கரையை பலப்படுத்தும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 06, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் ஆற்று கரையை பலப்படுத்தி துார்வாரும் பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஜீவிகா மிஷன் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்குப்பட்ட நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு கரையை பலப்படுத்தி, ஆழ்படுத்தும் பணிக்கு அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி மூலம் 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி உதவிப் பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
