/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.8 லட்சத்தில் உபகரணங்கள் எம்.எல்.ஏ., வழங்கல்
/
ரூ.8 லட்சத்தில் உபகரணங்கள் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : மே 05, 2024 03:56 AM

புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தை மேம்படுத்த, ரூ. 8 லட்சம் மதிப்பில், உபகரணங்களை கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி கைப்பந்து சங்கத் தலைவரான கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வை காட்டேரிக்குப்பம் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் கார்த்திகேயன் மற்றும் விளையாட்டு வீரர்கள், நேற்று சந்தித்தனர்.
அவரிடம், விளையாட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு, கடிதம் அளித்தனர்.
இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்து வரும், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த, கிளப்பிற்கு அனுமதி வழங்கினார்.
மேலும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த தேவையான, ரூ.8 லட்சம் மதிப்பில், இரும்பு பைப்கள், எல்.இ.டி பெட் லைட்டுகளை வழங்கினார். புதுச்சேரி கைப்பந்து சங்க பொருளாளர் பிரகாஷ் உடனிருந்தார்.