/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
/
கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2024 11:05 PM
புதுச்சேரி: கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசமாக பேசினர்.
மானிய கோரிக்கை மீதான விவாத்தில், நாக தியாகராஜன் எம்.எல்.ஏ., பேசுகையில்;
பள்ளி கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்கின்றனர். கஞ்சா விற்றவர்களை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குற்றவாளிகள் பிடித்தால், வழக்கி விழுவதை பார்க்கலாம்.
அதுபோல் புதுச்சேரியில் கஞ்சா விற்பவர்களை வழுக்கி விழுந்தால் தான் கஞ்சா விற்பதை தடுக்க முடியும்.
ராமலிங்கம் எம்.எல்.ஏ.: கஞ்சா விற்பவர்களை போலீசார் தாக்கினால், மற்ற போலீசார் பயந்து விடுவர் என்பது அவர்களின் எண்ணம். எனவே, கஞ்சா விற்பவர்களை பிடிக்க செல்லும் போலீசாருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அரசு துணையாக இருந்தால் தான் போலீசார் தைரியமாக கஞ்சா விற்பவர்களை பிடிப்பர். போலீசாருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
ரமேஷ் எம்.எல்.ஏ.: போலீசில் நல்ல அதிகாரிகள் உள்ளனர். அவர்களை கொண்டு சிறப்பு குழுக்களை உருவாக்கி கஞ்சாவை ஒழிக்க வேண்டும்.
ராமலிங்கம் எம்.எல்.ஏ.: உள்ளூர் போலீசார் சென்றால் கஞ்சா கும்பல் மிரட்ட வாய்ப்பு உள்ளது. வேலை கிடைக்காததால் பல இளைஞர்கள் மூர்க்கதனமாக உள்ளனர்.
சிக்னலில் காரை யாராவது இடித்தால் கூட அமைதியாக இருக்க வேண்டும். மோதிய சிறுவனிடம் முறைத்து கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். போலீசார் மீது நடந்த தாக்குதல் நிகழ்வால் மற்ற போலீசாருக்கு பயம் வந்து விடும். உயிருக்கு ஆபத்து வரும்.
இனிமேல் விட்டு கொடுத்து செல்லுங்கள் என அவரது குடும்பத்தினரே சொல்வர். எனவே, வெளி மாநில போலீசாரை சிறப்பு குழுவில் நியமித்து கஞ்சாவை ஒழிக்க வேண்டும்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.: பிற மாநிலத்தை போல 2 பேரை என்வுண்டரில் சுட்டால் தான் புதுச்சேரியில் கஞ்சாவை ஒழிக்க முடியும். இல்லையென்றால் கஞ்சாவை ஒழிக்க முடியாது.
சம்பத் எம்.எல்.ஏ.,: கஞ்சா விற்பவர்கள் மீது குண்டாஸ் வழக்கு போட வேண்டும்.
துணை சபாநாயகர் ராஜவேலு: இது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்' என்றார்.

