ADDED : ஏப் 20, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் இரண்டு ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். ஓட்டு சாவடியில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டுச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது. மொபைல் போனுடன் வந்தவர்கள் ஓட்டு சாவடிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஓட்டு சாவடி நுழைவு வாயில் பகுதியில் தன்னார்வலர்கள் மூலம் மொபைல் போன் பாதுகாப்பு மைய வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் மொபைல் போனை தன்னார்வலர்களிடம் கொடுத்து டோக்கனை பெற்று கொண்டு, ஓட்டு போட்டு வெளியே செல்லும் போது வாங்கி சென்றனர்.

