ADDED : ஆக 24, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் கோட்டுச் சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சீர்காழி, திருவெண்காடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர், உடல் நலம் பாதித்த தனது தாயை சேர்ந்தார். அவருக்கு உதவியாக செல்வகுமார் இருந்தார். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் துாங்கியபோது அவரது மொபைல் போன் திருடுபோனது.
இது குறித்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, போனை திருடிய மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சஞ்சய், 24, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

