ADDED : ஏப் 03, 2024 03:17 AM
புதுச்சேரி : புதுச்சேரி பிரசாரத்துக்கு பிரதமர் மோடி வருகிறார் என, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் களை கட்டியுள்ளது.பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம்,பா.ஜ.,மாநில தலைவர் செல்வகணபதி ஆகியோர் எதிர் கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, நமச்சிவாயம் வெற்றிப் பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என முதல்வர் கூறி வருகிறார். ஆனால் பா.ஜ.,கட்சியில் செல்வகணபதி ஏற்கனவே எம்.பி., இருக்கிறார். அவருக்கே பா.ஜ., மத்திய அமைச்சர் பதவி தரவில்லை என, எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பா.ஜ., மாநில தலைவர் செல்கணபதி கூறியதாவது: நான் ராஜ்ய சபா எம்.பி.,யாக சென்ற பிறகு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால் மத்திய அமைச்சராக நியமிக்கப்படவில்லை. நமச்சிவாயம் வெற்றிப்பெற்றால் மத்திய அமைச்சராக ஆவார். புதுச்சேரிக்கான முக்கியத்துவத்தை மத்தியில் அமைய உள்ள பா.ஜ., அரசு எப்போதும் போல் கொடுக்கும். புதுச்சேரியில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். இன்னும் தேதி முடிவாகவில்லை. இதேபோல் உள்துறை அமைச்சர் வருகை குறித்து இன்னும் முடிவாகவில்லை' என்றார்.

