/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடி ஊழியரிடம் பணம் மோசடி 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
/
அங்கன்வாடி ஊழியரிடம் பணம் மோசடி 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
அங்கன்வாடி ஊழியரிடம் பணம் மோசடி 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
அங்கன்வாடி ஊழியரிடம் பணம் மோசடி 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
ADDED : செப் 13, 2024 06:36 AM
புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியரிடம் பணம் மோசடி செய்த வழக்கில், 3 பேரை சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அங்கன்வாடி ஊழியர் கோகிலா. இவர் சமூக வளைதளம் மூலம் வந்த விளம்பரத்தில், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, தகவலை நம்பி, அவர் 18 லட்சம் ரூபாய் அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்தார்.
இதுகுறித்து, கோகிலா கடந்த மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, கேரளாவை சேர்ந்த பிரவீன், 32; நெய்வேலி பகுதியை சேர்ந்த துாபைல் அகமது,34, ராமச்சந்திரன், 36; உட்பட 7 பேரை கடந்த 1ம் தேதி கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அதில், பல்வேறு ஊர்களில் அலுவலகம் அமைத்து மோசடி செய்ததும், அந்த பணத்தில் இருந்து, கோடிக்கணக்கில், சொத்துக்கள் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 7 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட, முக்கிய குற்றவாளியான, பிரவீன், துாபைல் அகமது, ராமச்சந்திரன் ஆகிய மூவரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார், புதுச்சேரி நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
அதனை அடுத்து, பிரவீன் உட்பட 3 பேரையும் சைபர் கிரைம் போலீசார், நேற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக, பெங்களூரு, நாமக்கல் ஆகிய பகுதிக்கு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

