/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கு சனீஸ்வர பகவானுக்கு மூல நட்சத்திர வழிபாடு
/
பொங்கு சனீஸ்வர பகவானுக்கு மூல நட்சத்திர வழிபாடு
ADDED : மே 26, 2024 05:14 AM

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று மூல நட்சத்திரம் மற்றும் சனிக்கிழமையொட்டி பொங்கு சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 6:00 மணிக்கு மூலநாதர் வேதாம்பிகை அம்மன், பால விநாயகர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 7:00 மணிக்கு மேற்கு திசை பார்த்து அருள் பாலித்து வரும் பொங்கு சனீஸ்வர பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
பொங்கு சனீஸ்வரர் பகவான் நீல நிற மலர்களாலான சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித் தார்.