/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ட்ரோன் மூலம் கொசு மருந்து பா.ஜ., எம்.எல்.ஏ., கோரிக்கை
/
ட்ரோன் மூலம் கொசு மருந்து பா.ஜ., எம்.எல்.ஏ., கோரிக்கை
ட்ரோன் மூலம் கொசு மருந்து பா.ஜ., எம்.எல்.ஏ., கோரிக்கை
ட்ரோன் மூலம் கொசு மருந்து பா.ஜ., எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 01, 2024 01:37 AM

புதுச்சேரி : டெங்கு பரவலை தடுக்கும் வகையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனரை சந்தித்து பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தி, புதுச்சேரி மக்களை காப்பது அரசின் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தில் நகரம் மற்றும் கிராம புறத்தில் நிறைய நீர் நிலைகளில் தேங்கி உள்ள தண்ணீரின் மூலம் டெங்கு காய்ச்சல் எளிதில் மக்களிடம் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு துறையின் மூலம் ட்ரோன் கருவியை பயன்படுத்தி, புதுச்சேரி மாநிலத்தில் வீடு, கழிவுநீர் வாய்க்கால் மற்றும் நீர் நிலைகளில் தேங்கி உள்ள தண்ணீரில் தடுப்பு மருந்து தெளித்து டெங்கு காய்ச்சல் பரவலை தடுத்து, டெங்கு இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மலேரியா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை உருவாக்கியதற்காக, துறை இயக்குனருக்கும், அதிகாரிகளுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.