ADDED : ஏப் 14, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இரண்டு மகள்களுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த தனத்துமேட்டுத் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 36; இவரது மனைவி கலையரசி, 28; இவர்களின் மகள்கள் தஸ்மியா, முகேஸ்வரி. மாரிமுத்து வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு திரிந்து வந்தார்.
ஆத்திரமடைந்த கலையரசி, தனது இரண்டு மகள்களையும் அழைத்து கொண்டு கடந்த 10ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது தாய் காசியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

