ADDED : ஜூன் 27, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோர்க்காடு புதுநகரைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் ராஜன், 32; பஸ் டிரைவர். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனை தாய் செல்வி கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த ராஜன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.