ADDED : ஜூலை 21, 2026 03:12 PM
புதுச்சேரி: இந்திய மாதர் தேசிய சம்மேளம் புதுச்சேரி மாநில குழு சார்பில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.
பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகே நடந்த இயக்கத்திற்கு, தலைவர் தசரதா தலைமை தாங்கினார். செயலாளர் ஹேமலதா, நிர்வாக குழுவினர் ராஜகுமாரி, மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உறுப்பினர்கள் அம்சா, காயத்திரி தேவி, சமீரா, ரேவதி உள்ளிட்ட மகளிர் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள் பலர் இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.
இதில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மசோதாவுடன் மழைக்கால கூட்டத்தொடரிலேயே அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபாகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை அதிகாரம் கிடைக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
