/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
/
இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 03, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் சாலையில் மரத்தில் இருந்து இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலையில், தெப்பக்குளம் அருகே ஏராள மான இலவம் பஞ்சு மரங்கள் உள்ளன.
இந்த மரங்களில் இருந்து இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பறக் கின்றன. பஞ்சு அவ் வழியே பைக்கில் செல்வோர் முகத்தில் விழுவ தால், அவர்களின் கவனம் சிதறி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
அதே போல புதுச்சேரியில் நகர பகுதி சாலையோரம் உள்ள மரங்களில் இருந்து இலவ பஞ்சுகள் வெடித்து காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.