/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
/
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
UPDATED : பிப் 27, 2025 10:36 PM
ADDED : பிப் 27, 2025 02:07 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற தொடக்க விழாவுடன், கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2022ம் ஆண்டு இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார்.
முதலீடு செய்தவர்களின் தொகைக்கு ஏற்ப, நடிகை காஜல் அகர்வாலை வைத்து 100 நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். அதேபோல, மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.