/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 14, 2024 06:15 AM

புதுச்சேரி : நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு சார்பில், கோரிக்கைகை வலியுறுத்தி சட்டசபை முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டக்குழு ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். கன்வீனர்கள் வேளாங்கண்ணி, கலியபெருமாள், குணசேகரன், ஆனந்தன், பாண்டியன், பாலபாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
சம்மேளன கவுரவத்தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். 7 வது ஊதியக்குழுவை கடந்த 2016ம் ஆண்டு முதல் அமல்படுத்தி சம்பளம் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும்.
வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.