முத்துமாரியம்மன் கோவில் செடல் தேர்த்திருவிழா துவக்கம்.
முத்துமாரியம்மன் கோவில் செடல் தேர்த்திருவிழா துவக்கம்.
ADDED : ஜூலை 22, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் 35ம் ஆண்டு செடல் தேர் திருவிழா இன்று (23ம் தேதி) துவங்குகிறது.
இன்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, தொடர்ந்து, 25ம் தேதி முதல் , 29ம் தேதி வரை தினமும் இரவு, 7 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது.
30ம் தேதி அம்மன் வீதியுலா, 31ம் தேதி பகல் 12 மணிக்கு கூழ், பால் கஞ்சி வார்த்தல், பகல் 3 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது. 5 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. 1ம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், மாலை 6மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
