ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில், மைபாரத் இணையதள பதிவு முகாம் நடந்தது.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், மை பாரத் திட்டத்தை செயல்படுத்திரு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி பல்கலைகழக சமுதாயக் கல்லுாரியில், மைபாரத் இணையதள பதிவு முகாம் நடந்தது. மை பாரத் இணையதள நோடல், அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அருணா தலைமை தாங்கி, பதிவை துவக்கி வைத்தார். புதுச்சேரி மாவட்ட மை பாரத் கேந்திரா குழுவினர், மாணவர்களுக்கு பதிவு செய்ய தேவையான உதவிகளை வழங்கினர். இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மைபாரத் இணையதளத்தில் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சையை என்.எஸ்.எஸ்., உதவியாளர் செல்வம் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.
