/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணி கட்சிகளுக்கு நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு
/
கூட்டணி கட்சிகளுக்கு நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு
ADDED : ஏப் 23, 2024 05:10 AM
புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் பணியாற்றியகூட்டணி கட்சிகள், வாக்காளர்களுக்கு நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. எதிர்கட்சிகளின் போலி பிரசாரங்கள், பிரித்தாளும் சூழ்ச்சிகளை முறியடித்து, மீண்டும் மோடி என்ற ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
புதுச்சேரியில் பா.ஜ., வேட்பாளராக என்னை தேர்வு செய்த தேசிய தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர் முதல்வர் ரங்கசாமி, மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி.,க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனபணியாற்றி பா.ஜ., கட்சி, என்.ஆர்.காங்., பா.ம.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும், நண்பர்கள், தம்பிகளுக்கு நன்றி.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவித்தும், அறிவிக்காமலும் செயல்படுத்திய திட்டங்கள், சாதனைகளையும் கருத்தில் கொண்டு எதிர்கட்சிகளின் சூழ்ச்சி வலைகள், பொய் வாக்குறுதிகளை புறக்கணித்து தாமரைக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

