/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2025 04:37 AM

புதுச்சேரி : இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கல்வித்துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் தசரதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அஞ்சலிதேவி, ஆனந்தவள்ளி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் அமுதா கண்டன உரையாற்றினார். மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தவளக்குப்பம் தனியார் பள்ளியில், சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியரை நியமிக்க வேண் டும், குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நல கமிட்டி முறையாக செயல்பட கண்காணிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.