/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு நிறைவு
/
தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு நிறைவு
தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு நிறைவு
தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு நிறைவு
ADDED : மே 12, 2024 04:58 AM

புதுச்சேரி: தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகாரக்குழுவினர் 2 நாள் ஆய்வை நிறைவு செய்தனர்.
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார குழுவினர் கடந்த 9ம் தேதி ஆய்வை துவங்கினர். குஜராத் பரோடா வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக துணை வேந்தர் விஜய்குமார் ஸ்ரீவஸ்தவா, டில்லி பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் விஜயக்குமார் ஷ்ரோத்ரியா, பஞ்சாப் ஜலந்தர் ஹன்சுராஜ் மகிலா மகா வித்யாலயா முதல்வர் அஜய் சரீன் ஆய்வு செய்தனர்.
முதல் நாள் கல்லுாரி செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. 10ம் தேதி 2வது நாளில், தாகூர் கல்லுாரி வளாகத்தை மத்திய சுற்றுலாத்துறை நகர் வனமாக அறிவித்துள்ளதையும், பசுமையான வளாக பகுதிகளை கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் சுட்டி காட்டியதுடன், புத்தர் தோட்டம், சோழர் தோட்டம், வீரமங்கை வேலு நாச்சியார் தோட்டம் உள்ளிட்டவற்றை தேசிய தர நிர்ணய குழுவினர் பார்வையிட்டனர்.
இறுதியாக நடந்த வழியனுப்பு விழாவில், உள்தர மேம்பாட்டு குழுவினர் கருத்துரை வழங்கினர். மதிப்பீட்டு குழுவினர் அறிக்கையை கல்லுாரி முதல்வரிடம் வழங்கினர். உள்தர மேம்பாட்டு குழு இணை ஒருங்கிணைப்பாளர் சுனிதா நன்றி கூறினார்.