ADDED : ஜூலை 02, 2024 05:01 AM

புதுச்சேரி: தெலுங்கானா மாநிலம், காமா ரெட்டி தெலுங்கானா அரசு மற்றும் அறிவியல் கல்லுாரி கலாபாரதி அரங்கில் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடந்தது.
தெலுங்கானா மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் தாமோதர் தலைமை தாங்கினார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் வரவேற்றார். கரீம் நகர் நகராட்சி கவுன்சிலர் ஸ்ரீநிவாஸ் முன்னிலை வகித்தார். தெலுங்கானா காமா ரெட்டியின் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சங்வான், புதுச்சேரி மாநில தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவர் மற்றும் சமூக இளைஞர் நலப் பணிக்காக 11 தேசிய விருதினை பெற்ற சமூக சேவகர் ஆதவன், ஒடிசா மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சங்ராம் ஆகியோர் விழாவினை துவக்கி வைத்தனர்.
முகாமில் அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்யபிரதேசம், ஒரிசா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் பங்கேற்றனர்.