தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா

நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா

நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா


ADDED : ஜூலை 31, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்டம் துவக்க விழா நடந்தது.

நாட்டு நல பணித்திட்ட மாநில இணைப்பு அதிகாரி சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பிரட்ரிக் ரெஜிஸ் வரவேற்றார். பள்ளி முதல்வர்  ஸ்டெல்லா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பிளஸ் 2 ஒருங்கிணைப்பாளர் கலைவாணி கலந்து கொண்டு சிறப்பு பயிற்சி வழங்கி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் வரலாறு குறித்தும், மாணவ மாணவிகள் இரண்டு ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்.

பள்ளி மருத்துவ இயக்குனர் ஜீதா பிரட்ரிக் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், பள்ளியின் முன்னாள் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி ஜீவியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கு கையேடு பிரதிகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எஸ்., அதிகாரி சாந்த சீலன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us